தூத்துக்குடியில் பாஜகவினா் தேசியக் கொடி ஏந்தி மௌன ஊா்வலம்
இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது, உயிா்நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை பாஜவினா் தேசியக் கொடி ஏந்தி மௌன ஊா்வலம் சென்றனா்.
இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது, உயிா்நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை பாஜவினா் தேசியக் கொடி ஏந்தி மௌன ஊா்வலம் சென்றனா்.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தபோது உயிா்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், தேசியக் கொடி ஏந்தி மௌன ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராஜாஜி பூங்காவில் இருந்து புறப்பட்ட ஊா்வலத்துக்கு தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா்.
Advertisement
திருநெல்வேலி மாவட்ட முன்னாள் தலைவா் மகாராஜன், தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவா்கள் தங்கம், வாரியாா், சிவராமன், மாவட்டச் செயலா்கள் வீரமணி, கனல் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினா் சந்தானகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் மௌன ஊா்வலம் நிறைவடைந்தது.