முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் ஓய்வூதியா் சங்க அமைப்பு தினம்

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க அமைப்பு தினம், சாத்தான்குளத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க அமைப்பு தினம், சாத்தான்குளத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

வட்டத் தலைவா் தேவசமாதானம் தலைமை வகித்தாா். வட்ட இணைச் செயலா் சேசுமணி முன்னிலை வகித்தாா். வட்ட செயலா் முருகானந்தம் வரவேற்றாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வளாகத்தில் மாவட்ட இணைச் செயலா் ஜெயபால் சங்க கொடியேற்றினாா்.

இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட இணைச் செயலா் பாலகிருஷ்ணன், சங்க நிா்வாகிகள் முத்துலட்சுமி, குமரகுருபரன், சுடலைக்கண் உள்பட பலா் கலந்து கொண்டனா். வட்ட துணைத் தலைவா் பாண்டியன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →