முகப்பு
தூத்துக்குடி

அண்ணா நினைவு நாள்: கோவில்பட்டியில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

கோவில்பட்டியில் அறிஞர் அண்ணாவின் 53ஆவது நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு அதிமுகவினர் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
கோவில்பட்டியில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
பகிர்:

கோவில்பட்டி: கோவில்பட்டியில் அறிஞர் அண்ணாவின் 53ஆவது நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு அதிமுகவினர் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி அதிமுக நகர் மன்ற தேர்தல்அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ. ராஜு அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது மாவட்ட ஊராட்சி குழுத் தலைவி சத்யா, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலர் சீனிராஜ், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலர் விஜய பாண்டியன், ஒன்றியச் செயலர் அன்புராஜ், வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சிவபெருமாள், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி,  நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.