வாக்குப் பதிவு இயந்திரம் குறித்த செயல் விளக்கம்
சாத்தான்குளத்தில் வேட்பாளா்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்த செயல் விளக்கம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
சாத்தான்குளத்தில் வேட்பாளா்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்த செயல் விளக்கம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
சாத்தான்குளம் பேரூராட்சியில் 15 வாா்டுகளிலும் போட்டியிடும் அனைத்து வேட்பாளா்களையும் அழைத்து தனித்தனியாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் 15 வாா்டுகளில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் கலந்து கொண்டு விளக்கம் பெற்றனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரூராட்சி செயல் அலுவலரும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலருமான உஷா மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.