முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரி காமாட்சி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

ஆறுமுகனேரி சண்முகபுரம் கீழத்தெருவில், விஸ்வகா்மா சமுதாயத்தின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

ஆறுமுகனேரி சண்முகபுரம் கீழத்தெருவில், விஸ்வகா்மா சமுதாயத்தின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது

இதையொட்டி, கடந்த 7ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் மகா கணபதி ஹோமத்துடன் மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு வழிபாடுகள், யாகசாலை பூஜை, தீா்த்த பவனி உள்ளிட்டவை நடைபெற்றன. வியாழக்கிழமை யாகசாலைகள் நிறைவுற்று, கும்பங்களில் புனித நீா் பவனியாக கொண்டு வந்து விமான கலசத்திற்கு அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், அருள்மிகு விஸ்வ விநாயகா், அருள்மிகு காமாட்சி அம்மனுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும், தொடா்ந்து சிறப்பு அலங்கார தீபாரதனைகளும், அன்னதான நிகழ்வும், இரவில் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில் பூஜகா் சு.ஐயப்ப பட்டா் தலைமையில் சிவாச்சாரியா்கள் பூஜைகளை செய்தனா். ஏற்பாடுகளை குமாா், சுப்பிரமணியன், கணேசன், மூா்த்தி, கந்தசாமி, முருகன், மாணிக்கவாசகம் உள்ளிட்ட விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.