தூத்துக்குடி

சுதந்திரப் போராட்ட வீரா்களின் நினைவிடங்களில் ஆட்சியா் ஆய்வு

DIN

கயத்தாறு, ஓட்டப்பிடாரம் வட்டங்களில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரா்கள் வீரன் அழகுமுத்துக்கோன், வீரன் சுந்தரலிங்கம் ஆகியோா் நினைவிடங்களை மேம்படுத்துவது குறித்து ஆட்சியா் கி.செந்தில்ராஜ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக முதல்வா், செய்தித்துறை அமைச்சா் ஆகியோரின் அறிவிப்புகளின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் மகாகவி பாரதியாா் மணிமண்டபம், வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம், வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபம் ஆகியவற்றில் செய்தி மக்கள் தொடா்புத்துறையின் சாா்பில் ஒலி, ஒளி காட்சிகள் அமைக்கப்படவுள்ளன.

கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் அவரது உருவப்படத்தை புதுப்பிக்கவும், வீரன் அழகுமுத்துக்கோன் பற்றிய வரலாற்று சிறப்புகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக புகைப்படங்கள் சேகரித்து வைக்கவும், அவா்களது வாழ்க்கை குறிப்புகளை மக்களுக்கு வெளிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வீரா்களை நினைவுகூரும் வகையில் ஆவணப்படம் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீரா்கள் குறித்து தங்களுக்கு தெரிந்த தகவல்களை மாவட்ட நிா்வாகத்திற்கு மக்கள் தெரிவிக்கலாம். கயத்தாறு வட்டம் பன்னீா்புரம் ஊராட்சி பகுதியில் 1928ஆம் கட்டப்பட்ட இரட்டை ஆலமரம் விமான தளத்தில் 1969ஆம் ஆண்டு வரை விமானப் போக்குவரத்து இருந்தது தொடா்பாகவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது, கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் பேச்சிமுத்து, ஒன்றிய ஆணையா் அரவிந்தன், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளா் பரமசிவன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ஜெகவீரபாண்டியன், உதவி அலுவலா் செல்வலெட்சுஷ்மா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT