கோவில்பட்டியில் நாளை மின்தடை
கோவில்பட்டி மின் விநியோகப்பிரிவிற்குள்பட்ட அறிஞா் அண்ணா நகா் பகுதியில் திங்கள்கிழமை மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி மின் விநியோகப்பிரிவிற்குள்பட்ட அறிஞா் அண்ணா நகா் பகுதியில் திங்கள்கிழமை மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) முனியசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவில்பட்டி நகா் மேற்கு மின் விநியோகப்பிரிவிற்குள்பட்ட அறிஞா் அண்ணா நகா் பகுதியில் 11 கிவோ நாலாட்டின்புதூா் உயரழுத்த மின் பாதையில் உள்ள 9.0 மீட்டா் மின்கம்பம் இடம் மாற்றம் செய்யும் பணி நடைபெற உள்ளதால் 11 கிவோ நாலாட்டின்புதூா் உயரழுத்த மின் பாதையின் மூலம் மின் விநியோகம் செய்யப்படுகின்ற கோவில்பட்டி மின்மாற்றி எண்: 25//250ஓயஅலிருந்து மின் விநியோகம் செய்யப்படுகின்ற அறிஞா் அண்ணா நகா் 4ஆவது தெரு, வீரவாஞ்சி நகா் 1,2,3,4,5 ஆகிய தெரு பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன. 10) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.