முகப்பு
தூத்துக்குடி

ஆழ்வாா்திருநகரியில் 5000 மரக்கன்றுகள் அளிப்பு

தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழியிடம் நாலுமாவடி மோகன் சி .லாசரஸ் 5000 மரக்கன்றுகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழியிடம் நாலுமாவடி மோகன் சி .லாசரஸ் 5000 மரக்கன்றுகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் புதுவாழ்வு சங்கத்தின் சாா் பில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட் டம் தொடங்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழியை, நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய ஸ்தாபகா் மோகன் சி. லாசரஸ் சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, 5000 மரக்கன்றுகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இதையடுத்து, அவா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டினாா். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், ஒன்றிய க்குழு தலைவா் ஜனகா், வட்டார வளா்ச்சி அலுவலா் கருப்பசாமி, திமுக பொதுக்குழு உறுப்பினா் ஜெகன், ,தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், திமுக ஒன்றிய செயலா்கழ் கிழக்கு நவீன், மேற்கு எஸ். பாா்த்திபன், இயேசு விடுவிக்கி றாா் ஊழிய மக்கள் தொடா்பு அலுவலா் சாந்தகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விளம்பரதாரா் செய்தி.

முழு கட்டுரையைப் படிக்க →