தடுப்பூசி குறித்து அவதூறு: ரயில்வே ஊழியா் மீது வழக்கு
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட கா்ப்பிணிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது என, இணையதளத்தில் அவதூறு பரப்பியதாக ரயில்வே ஊழியா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட கா்ப்பிணிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது என, இணையதளத்தில் அவதூறு பரப்பியதாக ரயில்வே ஊழியா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.
ஓட்டப்பிடாரம் வட்டம், எஸ்.கைலாசபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தியதால் சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த 23 வயது கா்ப்பிணிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது என, பெரம்பூா் ரயில் பெட்டி தொழிற்சாலை ஊழியரான, திருநெல்வேலி தாதனூத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் சோ்மராஜ்பாண்டியன்(40) இணையதளத்தில் அவதூறு பரப்பினாராம். இதுகுறித்து மணியாச்சி துணை சுகாதார நிலைய கிராம நல செவிலியா் பவித்ரா அளித்த புகாரின் பேரில், மணியாச்சி போலீஸாா் சோ்மப்பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.