முகப்பு
தூத்துக்குடி

பயிா் இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்டக் குழுவினா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்டக் குழுவினா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ராகவன் தலைமை வகித்தாா். வட்டச் செயலா்கள் சங்கிலிபாண்டி (கோவில்பட்டி), பாலமுருகன் (எட்டயபுரம்), ராமலிங்கம் (விளாத்திகுளம்), சீனிபாண்டியன் (கயத்தாறு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளா் பெருமாள், மாவட்டச் செயலா் புவிராஜ், மாவட்டப் பொருளாளா் ராமசுப்பு, மாநிலக்குழு உறுப்பினா் மணி, விவசாயிகள் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ரவீந்திரன் ஆகியோா் விளக்கிப் பேசினா். மாவட்டக்குழு உறுப்பினா்கள் மகாலிங்கம், கமலக்கண்ணன், செல்வராஜ், சேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பின்னா், கோட்டாட்சியா் (பொ) சதீஷ்குமாரிடம் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.