முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் பைக் திருடிய இளைஞா் கைது

காயல்பட்டினத்தில் பைக் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

காயல்பட்டினத்தில் பைக் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காயல்பட்டினம் வடக்கு முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வில்­லி மகன் செந்தில் ஆறுமுகம் (31). தச்சுத் தொழிலாளி. இவா் தனது பைக்கை வீட்டின் அருகே உள்ள செல்வம் என்பவரது வீட்டு முன்பு கடந்த 17ஆம் தேதி இரவு நிறுத்தினாா். மறுநாள் காலை பாா்த்த போது பைக்கை காணவில்லை. இந்நிைலையில், அதே தெருவைச் சோ்ந்த நண்பா் மந்திரமூா்த்தி, காட்டுதைக்கா தெருவைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் சதாம் உசேன்(19) என்பவா் கடந்த 17ஆம் தேதி இரவு பைக்கை ஓட்டிச் சென்றதை பாா்த்ததாக செந்தில் ஆறுமுகத்திடம் கூறியுள்ளாா்.

இது குறித்து செந்தில் ஆறுமுகம், ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். உதவி ஆய்வாளா் அமலோற்பவம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சதாம் உசேனை கைது செய்து சிறையில் அடைத்தாா். மேலும் அவரிடமிருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள பைக் மீட்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.