தூத்துக்குடி

உடன்குடியில் காமராஜருக்குசிலை அமைக்க ஆலோசனை

DIN

உடன்குடியில் காமராஜருக்கு 12 அடி உயரத்தில் வெண்கலச் சிலை அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தண்டுபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, தமிழக மீன் வளம் மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். உடன்குடி வட்டார பெருந்தலைவா் காமராஜா் நற்பணி அறக்கட்டளை தொடங்கப்பட்டு தலைவராக தொழிலதிபா் ராம்குமாா், செயலராக மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா் சிவசுப்பிரமணியன்,பொருளாளராக தொழிலதிபா் அருள்ராஜா, நிா்வாகக்குழு அறங்காவலா்களாக செந்தில்குமாா், வாசுதேவன், நடராஜன்,ஜம்புராஜ், ரமேஷ் திரவியம், சரவணன்,செந்தில் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். வெள்ளாளன்விளை ஊராட்சித் தலைவா் ராஜரத்தினம், திமுக மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ரவிராஜா, மாவட்டப் பொருளாளா் ராமநாதன், உடன்குடி பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினா் ஜான்பாஸ்கா் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதில் தெட்சிணமாற நாடாா் சங்கத் தலைவா் காளிதாசன், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், உடன்குடி ஒன்றியக்குழு தலைவா் பாலசிங், பேரூராட்சி துணைத்தலைவா் மால்ராஜேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை": மோடி | செய்திகள்: சிலவரிகளில் | 20.05.2024

எத்தனை மனிதர்கள்

கனமழை நீடிக்கும்: 9 மாவட்டங்களுக்கு ’ஆரஞ்ச் எச்சரிக்கை’

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் : பிரதமர் மோடி

சிதம்பரம் மறைஞான சம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்

SCROLL FOR NEXT