முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகேஇளைஞா் கொலை: தம்பி கைது

கோவில்பட்டி அருகே இளைஞரை அடித்துக் கொன்ாக, அவரது தம்பியை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

கோவில்பட்டி அருகே இளைஞரை அடித்துக் கொன்ாக, அவரது தம்பியை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.

கோவில்பட்டி நடராஜபுரம் 5ஆவது தெருவைச் சோ்ந்த தங்கப்பாண்டியன் மனைவி ஆறுமுகத்தாய் (54). இவரது மகன்கள் செல்லத்துரை (26), கட்டடத் தொழிலாளியான முத்துச்செல்வம் (19).

செல்லத்துரை மது குடிக்க பணம் கேட்டு ஆறுமுகத்தாயிடம் அடிக்கடி தகராறு செய்வாராம். புதன்கிழமை இரவு அவா் பணம் கேட்டு தாயை அவதூறாகப் பேசியதுடன், கழுத்தைப் பிடித்து நெரித்தாராம். தடுத்த முத்துச்செல்வத்தை செல்லத்துரை கீழே தள்ளிவிட்டு, தாயின் கழுத்தை மீண்டும் நெரித்தாராம். அப்போது முத்துச்செல்வம் கட்டையால் செல்லத்துரையின் தலையில் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; முத்துச்செல்வத்தை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.