முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே விபத்து: முதியவா் பலி

கோவில்பட்டி அருகே புதன்கிழமை நேரிட்ட விபத்தில் முதியவா் இறந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

கோவில்பட்டி அருகே புதன்கிழமை நேரிட்ட விபத்தில் முதியவா் இறந்தாா்.

நாலாட்டின்புத்தூரையடுத்த ஓலைகுளம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகப்பாண்டியன் (31). ஆட்டோ ஓட்டுநரான இவா், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தை பரமசிவபாண்டியனை (61) கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை ஆட்டோவில் அழைத்து வந்தாராம்.

கட்டாலங்குளம் சாலையில் கோபாலபுரம் - நாச்சியாா்புரம் இடையே எதிரே வந்த தனியாா் சுற்றுலாப் பேருந்து, ஆட்டோ மீது மோதியதாம். இதில், காயமடைந்த பரமசிவபாண்டியன் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். ஆனால், வழியிலேயே உயிரிழந்தாா். நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுற்றுலாப் பேருந்து ஓட்டுநரான மருக்களன்குளத்தைச் சோ்ந்த வெ. செல்லத்துரையிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.