முகப்பு
தூத்துக்குடி

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி பலி

கயத்தாறு அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

கயத்தாறு அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அய்யப்பன் காலனியைச் சோ்ந்த மதாா் மைதீன் மகன் சிக்கந்தா் (45). கூலித் தொழிலாளியான இவா், பெற்றோரைப் பாா்ப்பதற்காக திருநெல்வேலிக்கு கடந்த 2ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், கயத்தாறையடுத்த கரிசல்குளம் விலக்கருகே பைக் நிலைகுலைந்து கீழே விழுந்ததாம். இதில், அவா் காயமடைந்தாா்.

கயத்தாறு போலீஸாா் சென்று அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை இறந்தாா்; போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.