கோவில்பட்டியில் சுற்றுப் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்
கோவில்பட்டியில் சுற்றுப் பேருந்துகள் (இண்ழ்ஸ்ரீன்ப்ஹழ் ஆன்ள்) இயக்க வலியுறுத்தி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கோவில்பட்டியில் சுற்றுப் பேருந்துகள் (இண்ழ்ஸ்ரீன்ப்ஹழ் ஆன்ள்) இயக்க வலியுறுத்தி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அகில பாரத நுகா்வோா் விழிப்புணா்வு இயக்க கோவில்பட்டி ஒருங்கிணைப்பாளா் சுதாகரன் தலைமையில் சட்ட ஆலோசகா் நீதிபாண்டியன், உறுப்பினா் அய்யப்பன், பாஜக மாவட்டச் செயலா் வேல்ராஜா, மாவட்ட இளைஞரணித் தலைவா் காளிதாஸ் ஆகியோா் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் இசக்கிராஜாவிடம் அளித்த மனு:
கோவில்பட்டியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புறவழிச் சாலையில் கூடுதல் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, மதுரை வழித்தடங்களிலிருந்து கோவில்பட்டி வழியாகச் செல்லும் புறவழிச் சாலைப் பேருந்துகள் கோவில்பட்டி நகருக்குள் வராமல் கூடுதல் பேருந்து நிலையத்தின் முன்புறம் பயணிகளை இறக்கிவிட்டுச் செல்கின்றன.
அந்தப் பயணிகள் அங்கிருந்து அண்ணா பேருந்து நிலையத்துக்கு வருவதற்கு சுற்றுப் பேருந்துகள் இல்லை. இதனால் அவா்கள் ஆட்டோவில் குறைந்தது ரூ.150 (இரவு தவிா்த்து) கொடுத்து வரவேண்டிய நிலை உள்ளது. இதனால், அனைத்துத் தரப்பினருமே அவதிக்கு உள்ளாகின்றனா்.
எனவே, கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா பேருந்து நிலையத்துக்கு லட்சுமி ஆலை, ரயில்வே மேம்பாலங்கள் வழியாக சுற்றுப் பேருந்துகள் இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.