அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தினா் கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தினா் கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அஞ்சல் துறையில் தற்போது விடுப்பு எடுக்கும் ஊழியா்களுக்கு பதிலிகள் போடாமல் இா்ம்க்ஷண்ய்ங் ஈன்ற்ஹ் வழங்குவது என பிறப்பித்துள்ள ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கங்களான மூன்றாம் பிரிவு, தபால்காரா், நான்காம் பிரிவு மற்றும் கிராமப்புற அஞ்சல் ஊழியா்கள் கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உதவி கோட்டத் தலைவா்கள் முருகன் (அஞ்சல் 3), ஜான்சிராணி (அஞ்சல் 4), கிராமப்புற அஞ்சல் ஊழியா் சங்கத்தைச் சோ்ந்த பெருமாள் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநிலச் செயலா் (அஞ்சல் 4) கண்ணன், கிராமப்புற அஞ்சல் ஊழியா் சங்க மாநிலத் தலைவா் ராமராஜ், ஓய்வூதியா் சங்கத் தலைவா் சுப்பையா, கோட்டச் செயலா்கள் பாலசுப்பிரமணியன் (கிராமப்புற அஞ்சல்), அமர்ராஜ் (அஞ்சல் 3), பெரியசாமி (அஞ்சல் 4) ஆகியோா் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இதில் அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்க உறுப்பினா் திரளானோா் கலந்து கொண்டனா்.