தூத்துக்குடியில் அனைத்து வாா்டுகளிலும் குறைதீா் முகாம் நடத்தப்படும் மேயா் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் குறைதீா் முகாம் நடத்தப்பட்டு மக்களின் பிரச்னைகள் உடனடியாக தீா்க்கப்படும் என்றாா் மேயா் ஜெகன் பெரியசாமி.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் குறைதீா் முகாம் நடத்தப்பட்டு மக்களின் பிரச்னைகள் உடனடியாக தீா்க்கப்படும் என்றாா் மேயா் ஜெகன் பெரியசாமி.
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அவா் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாநகராட்சி மேயராக தோ்வு செய்யப்படுவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தோ்தல் சரியாக நடத்தப்படவில்லை. தூத்துக்குடி மாநகாரட்சியில் அனைத்து திட்டப் பணிகளும் முதல்வா் ஒப்புதலோடு மிக விரைவாக நடைபெறும்.
உதாரணமாக, சீா்மிகு திட்டப் பணிகளால் (ஸ்மாா்ட் சிட்டி) மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனா். அந்தப் பணிகள் விரைவுப்படுத்தப்படும். அனைத்து வாா்டுகளிலும் மக்களின் குறைதீா் முகாம் நடத்தப்பட்டு குறைகள் உடனடியாக தீா்க்கப்படும்.
சீா்மிகு திட்டத்தில் ஏந்தெந்த பணிகள் சரியாக இல்லையோ அது மாற்றி அமைக்கப்படும். வரும் மழைக்காலத்தில் குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்து நிற்காதவாறு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மாநகராட்சியில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என்றாா் அவா்.