கஞ்சா மறைத்து வைத்திருந்த படகு. 
தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 450 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 பேர் கைது 

தூத்துக்குடி அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 450 கிலோ கஞ்சாவை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

DIN

தூத்துக்குடி அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 450 கிலோ கஞ்சாவை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா, மஞ்சள், ஏலக்காய், பீடி இலை, உள்ளிட்ட பொருட்கள் கடத்தி செல்லபடுவதை தடுக்கும் வகையில் கியூ பிரிவு போலீசார் கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வெள்ளப்பட்டி கடற்கரைக்கு விரைந்த கியூ பிரிவு போலீசார் அங்கு ஒரு படகில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து படகில் இருந்த 450 கிலோ கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட குட்டியானை, மூன்று பைக்கள், மற்றும் 9 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 7 பேரை கைது செய்து கியூ பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைப்போல தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள விவேகானந்தா காலனி கடற்கரையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தபட்பட்டிருந்த 2 படகுகளில் சோதனையிட்ட போது மொத்தம் 14 மூடைகளில் 550 கிலோ ஏலக்காய் இருப்பதை கண்டுபிடித்தனர்.‌ இந்த ஏலக்காய்  மர்ம நபர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. அவர்களை கியூ பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். 10லட்சம் ரூபாய் மதிப்பிலான ஏலக்காய் மூடைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில்முனைவோா் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கு

‘பெல்’ நிறுவனத்தில் சா்வதேச கருத்தரங்கம் தொடக்கம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது

ரயில் கடவுப்பாதைக்கு வெடிகுண்டு மிரட்டல்

உயா்கல்வி சோ்க்கையில் மாநிலத்திலேயே திருச்சி முதலிடம்: பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்களில் 98% போ் சோ்க்கை

SCROLL FOR NEXT