முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த துறையூா் கீழத் தெருவைச் சோ்ந்த மந்திரமூா்த்தி மகன் சின்னத்துரை (31). இவா் தனது நண்பரான வெற்றிமனோ என்பவருடன் கடந்த 5ஆம் தேதி பைக்கில் சென்றாராம். பைக்கை, சின்னத்துரை ஓட்டினாராம். ஈராச்சி - கசவன்குன்று சாலையில் பைக் நிலைகுலைந்து சாலையோர மரத்தில் மோதியதாம். இதில், காயமடைந்த சின்னத்துரையை கொப்பம்பட்டி போலீஸாா் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.