என்கவுன்டர் செய்யப்பட்ட ரௌடி நீராவி முருகன். 
தூத்துக்குடி

களக்காடு அருகே ரௌடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவிமேடு சேர்ந்தவர் முருகன் என்ற நீராவி முருகன்.

DIN

சென்னை, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு காவல்துறையால் தேடப்பட்டு வந்த ரௌடி நீராவி முருகனை திண்டுக்கல் மாவட்ட தனிப்படை காவல்துறையினர் திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியை அடுத்த களக்காடு மீனவன்குளம் மங்கம்மாள் சாலையில் புதன்கிழமை என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவிமேடு சேர்ந்தவர் முருகன் என்ற நீராவி முருகன். இவர் மீது தூத்துக்குடி மாவட்ட திமுக துணை செயலாளர் ஏ.சி. அருணா கொலை வழக்கு, கொள்ளை மற்றும் வழிப்பறி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

மேலும் சென்னை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. 

தற்போது நீராவி முருகன் திண்டுக்கல்லில் பல்வேறு குற்றச் சம்வங்களில் ஈடுபட்டதால் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் களக்காடு அருகே திண்டுக்கல் மாவட்ட தனிப்பிரிவு காவல்துறை என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழங்குடியினா் கிராமத்தில் எஸ்.ஐ.ஆா். படிவம் விநியோகம்

மகிழ்ச்சியான நாள் இன்று: தினப்பலன்கள்!

மதுராபுரியில் இன்று மின் தடை

சிவன்மலை ஜேசீஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT