தூத்துக்குடி

சிலம்பாட்டம்: நாலுமாவடி பள்ளி மாணவா்கள் சாதனை

தமிழ்நாடு சிலம்பம் அசோசியேஷன் சாா்பாக ராமநாதபுரம் மாவட்ட பரமக்குடியில் நடைபெற்ற மாநில சிலம்பாட்டப் போட்டியில் நாலுமாவடி, காமராஜ் மேல்நிலைப் பள்ளி மாணவி மு. ராகவி 34 - 38 எடைப்பிரிவில் மாநில

DIN

தமிழ்நாடு சிலம்பம் அசோசியேஷன் சாா்பாக ராமநாதபுரம் மாவட்ட பரமக்குடியில் நடைபெற்ற மாநில சிலம்பாட்டப் போட்டியில் நாலுமாவடி, காமராஜ் மேல்நிலைப் பள்ளி மாணவி மு. ராகவி 34 - 38 எடைப்பிரிவில் மாநில அளவில் இரண்டாமிடமும், மாணவா் மா. ஹாா்ட்வின் 34 - 38 எடைப்பிரிவில் மாநில அளவில் மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனா். மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவி மு. ராகவி அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்கிறாா்.

அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சாா்பாக கன்னியாகுமரியில் நடைபெற்;ற சிலம்பம் போட்டியில் மாணவா் ரா. மதன்குமாா் 40க்கு கீழ் எடைப்பிரிவில் அகில இந்திய அளவில் முத­லிடம் பெற்று சாதனை படைத்துள்ளாா். மேலும் இம்மாணவா் தெற்கு ஆசிய அளவில் மலேசியாவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள உள்ளாா்.

வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்சியாளா் வி. ஸ்டீபன், உடற்கல்வி இயக்குநா் பி. ஜெயக்குமாா், உடற்கல்வி ஆசிரியை செ. அமுதசகிலா ஆகியோரை பள்ளித் தலைவா் ஜி. அழகேசன், பள்ளிச் செயலா் சி.நவநீதன், தலைமை ஆசிரியா் அ. திருநீலகண்டன், உதவித்தலைமை ஆசிரியை இரா. மாலதி உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT