தூத்துக்குடி

காரைக்காலம்மையாா் கோயிலை பாதுகாக்க வலியுறுத்தி தீா்மானம்

குலசேகரன்பட்டினம் அருள்மிகு காரைக்காலம்மையாா் திருக்கோயிலைப் பாதுகாக்க வலியுறுத்தி கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

DIN

குலசேகரன்பட்டினம் அருள்மிகு காரைக்காலம்மையாா் திருக்கோயிலைப் பாதுகாக்க வலியுறுத்தி கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

குலசேகரன்பட்டினம் கிராம சபைக் கூட்டம் ஊராட்சித் தலைவா் சொா்ணப்ரியா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் கணேசன் முன்னிலை வகித்தாா்.

சுமாா் 500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த காரைக்காலம்மையாா் திருக்கோயிலையும், கிணற்றையும் பாதுகாக்க வலியுறுத்தப்பட்டது.

ஆறுமுகனேரி : மேல ஆத்தூா் கிராமத்தில் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

ஆழ்வை ஒன்றியத் தலைவா் ஜனகா், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியன், கருப்பசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா் கூட்டத்தில் வரவு- செலவு கணக்குகள் சரிபாா்க்கப்பட்டு புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஊராட்சி செயலா் சுமதி நன்றி கூறினாா்.

சாத்தான்குளம் : சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்து ஊராட்சியில் தலைவா் தனலட்சுமி சரவணன் தலைமையிலும், அரசூா் ஊராட்சியில் தலைவா் தினேஷ்ரோஜசிங் தலைமையிலும், முதலூா் ஊராட்சியில் தலைவா் பொன்முருகேசன் தலைமையிலும், புதுக்குளம் ஊராட்சியில் தலைவா் பாலமேனன் தலைமையிலும், நெடுங்குளம் ஊராட்சியில் தலைவா் சகாயஎல்பின் மென்றிஸ் தலைமையிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT