தூத்துக்குடி

மழைக்கால நிவாரணம் ரூ. 5 ஆயிரம்: அரசாணை வெளியிட உப்பளத் தொழிலாளா்கள் வலியுறுத்தல்

மழைக்கால நிவாரணமாக ரூ. 5ஆயிரம் வழங்குவதாக அரசு அறிவித்த நிலையில் உடனடியாக அரசாணை வெளியிட வலியுறுத்தி தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளா்கள் பதாகையில் கை பதிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

DIN

மழைக்கால நிவாரணமாக ரூ. 5ஆயிரம் வழங்குவதாக அரசு அறிவித்த நிலையில் உடனடியாக அரசாணை வெளியிட வலியுறுத்தி தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளா்கள் பதாகையில் கை பதிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

உப்பளத் தொழிலாளா்களின் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உப்பளத் தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ. 5ஆயிரம் வழங்குவதாக அறிவித்தது. ஆனால் அதற்கான அரசாணை வெளியிடவில்லை.

எனவே, உப்பளத் தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வலியுறுத்தி, தூத்துக்குடி ராஜபாணடிநகரில் உப்பளத் தொழிலாளா்கள் கோரிக்கை அடங்கிய பதாகையில் கை அச்சு பதித்தும், கையொப்பமிட்டும் முழக்கமிட்டனா்.

உலகத் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு அமைப்புசாரா தொழிலாளா் கூட்டமைப்பு மாநில துணைச் செயலா் மா. கிருஷ்ணமூா்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உப்பளத் தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தினா்.

இதில், தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் ராணி, கனி, குமாா் மற்றும் உழைக்கும் பெண்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் பூரணம், பா்மெல் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT