தூத்துக்குடி

துறையூரில் மாட்டு வண்டிப் போட்டி

DIN

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த துறையூரில் மாட்டு வண்டி போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

துறையூர் அருள்மிகு ஸ்ரீ வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி போட்டி, சிறிய மாட்டு வண்டி போட்டி என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. 10 மைல் தொலைவு கடக்க வேண்டிய பெரிய மாட்டு வண்டி போட்டியில் 5 மாட்டு வண்டிகளும், 6 மைல் தொலைவு கடக்க வேண்டிய சிறிய மாட்டு வண்டி போட்டியில் 11 மாட்டு வண்டிகளும் பங்கேற்றன.

மாட்டு வண்டி போட்டிகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலர் கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார். துறையூரில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி போட்டியில் மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெருமாள்சாமி மாட்டு வண்டி முதலிடம், சிவஞானபுரத்தைச் சேர்ந்த மந்திரமூர்த்தி மாட்டு வண்டி 2ஆம் இடம், தொட்டம்பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் மாட்டு வண்டி 3ஆம் இடமும் பிடித்தது.

சிறிய மாட்டு வண்டி போட்டியில் கச்சேரி தளவாய்புரத்தைச் சேர்ந்த கணேசன் மாட்டு வண்டி முதலிடம், சீவலப்பேரியைச் சேர்ந்த துர்காம்பிகா மாட்டு வண்டி 2ஆம் இடம், கடம்பூரைச் சேர்ந்த கருணாகரராஜா மாட்டு வண்டி 3ஆம் இடமும் பிடித்தது.

பெரிய மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்ற முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு முறையே ரூ. 25 ஆயிரத்து 1, ரூ. 23 ஆயிரத்து 1, ரூ.21 ஆயிரத்து 1 ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது. சிறிய மாட்டு வண்டி போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு முறையே ரூ. 20 ஆயிரத்து 1, ரூ. 18 ஆயிரத்து 1, ரூ. 16 ஆயிரத்து 1 ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது.

இதில், துறையூர் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகலட்சுமி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் துறையூர் கணேஷ்பாண்டியன், அதிமுக ஒன்றியச் செயலர்கள் அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன், முன்னாள் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை துறையூர் அருள்மிகு வெயிலுகந்தம்மன் திருக்கோயில் விழா கமிட்டியினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருவள்ளூரில் திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT