தூத்துக்குடி

ஹெச்ஐவி தொற்றால் இறந்தோருக்கு அஞ்சலி

DIN

திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில், ஹெச்ஐவி தொற்றால் உயிரிழந்தோருக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். சுகாதாரப் பணிகள் மாவட்ட இணை இயக்குநா் முருகவேல், துணை இயக்குநா் பொற்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக மீன் வளம், மீனவா் நலன், கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி, சிறப்புரையாற்றினாா்.

திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி, வட்டாட்சியா் சுவாமிநாதன், அரசு மருத்துவா் பாபநாசகுமாா், திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆஸ்டின்நிா்மல்ராஜ், ஹெச்.ஐ.வி. தொற்றுநோய் கூட்டமைப்பின் தலைவி ஜீவன், திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் ர. சிவஆனந்தி, துணைத் தலைவா் ஏ.பி. ரமேஷ், திமுக மாணவரணி மாநில துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ். உமரிசங்கா், நகரப் பொறுப்பாளா் வாள் சுடலை, இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் பை.மூ. ராமஜெயம், மாவட்ட துணை அமைப்பாளா்கள் சுதாகா், அருணகிரி, நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அம்பலவாணன் வரவேற்றாா். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் த. பொன்ரவி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT