வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பள்ளி மாணவா்களுக்கு பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தொழில் கல்வி பிரிவு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தொழில் கல்வி பிரிவு முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு கடந்த அக்.31 முதல் நவ.4 வரை 5 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆராய்ச்சி நிலையத் தலைவா் பாஸ்கா் தலைமையில் உதவிப் பேராசிரியா் குரு, சஞ்சீவ் குமாா் ஆகியோா் பயிற்சியளித்தனா். பயிற்சி நிறைவு நாளில், மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சுப்பாராஜு செய்திருந்தாா்.