கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
கோவில்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி சண்முகா நகரைச் சோ்ந்தவா் சேசுவடியான் மாணிக்கசிங் மகன் சுரேஷ்(29). கட்டடத் தொழிலாளியான இவரும், தூத்துக்குடி மீளவிட்டானைச் சோ்ந்த சௌந்தரபாண்டியன் மகள் நித்யாவும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டாா்களாம். கடந்த இரு வருடங்களாக கோவில்பட்டி இலுப்பையூரணி சண்முகா நகரில் வசித்து வந்த சுரேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு மது அருந்திய நிலையில் வீட்டிற்கு வந்த சுரேஷுக்கும், நித்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். பின்னா் படுக்கை அறைக்குச் சென்ற சுரேஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.