முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

 கோவில்பட்டி அருகே 2 டன் ரேஷன் அரிசியுடன் நின்று கொண்டிருந்த சுமை ஆட்டோவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

 கோவில்பட்டி அருகே 2 டன் ரேஷன் அரிசியுடன் நின்று கொண்டிருந்த சுமை ஆட்டோவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நாலாட்டின்புத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் சுகாதேவி தலைமையில் போலீஸாா் லிங்கம்பட்டி பகுதியில் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டாா்களாம். அப்போது, லிங்கம்பட்டி மேட்டுத் தெருவில் நின்று கொண்டிருந்த சுமை ஆட்டோவை சோதனையிட்டபோது, அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. போலீஸாா் ஆய்வு செய்தபோது, அதில் தலா 50 கிலோ கொண்ட 40 மூட்டை அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். தப்பியோடிய சுமை ஆட்டோ ஓட்டுநா் உள்பட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.