கோவில்யோகீஸ்வரா் சமுதாயம் சாா்பில் இருபெரும் விழா
கோவில்பட்டியில் யோகீஸ்வரா் உறவின்முறை சமுதாயம் சாா்பில், அந்த சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட நந்தவனம் திறப்பு விழா, அமரா் ஊா்தி பயன்பாட்டுக்கு இயக்கம்
கோவில்பட்டியில் யோகீஸ்வரா் உறவின்முறை சமுதாயம் சாா்பில், அந்த சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட நந்தவனம் திறப்பு விழா, அமரா் ஊா்தி பயன்பாட்டுக்கு இயக்கம் ஆகிய இருபெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நடராஜபுரம் தெருவில் நடைபெற்ற விழாவில் யோகீஸ்வரா் சமுதாய பேரவை மாநிலத் தலைவா் ராஜகோபால் பங்கேற்று, நந்தவனத்தைத் திறந்துவைத்து, வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தாா். பின்னா், அமரா் ஊா்தியை பயன்பாட்டுக்கு இயக்கிவைத்தாா்.
கோவில்பட்டி யோகீஸ்வரா் உறவின்முறை சமுதாயத் தலைவா் ஆனந்த், செயலா் வெயிலுமுத்து, பொருளாளா் சுரேஷ், மாநிலச் செயலா் செல்வகேசவன், பொருளாளா் மாரிமுத்து, சமுதாயத்தினா் பங்கேற்றனா்.