தூத்துக்குடி

வட்டார அளவிலான குழு போட்டி: கோவில்பட்டி அரசு மகளிா் பள்ளி சிறப்பிடம்

DIN

கோவில்பட்டி வட்டார அளவிலான குழு விளையாட்டுப் போட்டியில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.

கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 14,19 வயதுக்குள்பட்டோருக்கான மேஜை பந்து போட்டியில் முதலிடம், 17 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியில் 2ஆம் இடம், 14,17,19 வயதுக்குள்பட்டோருக்கான கேரம் போட்டியில் முதல் மற்றும் 2ஆம் இடம், எறிபந்து போட்டியில் 2ஆம் இடம், 14,17 வயதுக்குள்பட்டோருக்கான வாலிபால் போட்டியில் முதலிடம், 19 வயதுக்குள்பட்டோருக்கான கபடி போட்டியில் முதலிடம், 14,17 வயதுக்குள்பட்டோருக்கான ஹாக்கிப் போட்டியில் முதலிடம் பிடித்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.

ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்ற மாணவிகளுக்கு கயத்தாறு பேரூராட்சித் தலைவா் சுப்புலட்சுமி விளையாட்டு சீருடைகளை வழங்கினாா். சாதனை படைத்த மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியை ஜெயலதா மற்றும் ஆசிரியைகள், அலுவலக ஊழியா்கள், உடற்கல்வி இயக்குநா்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

SCROLL FOR NEXT