தூத்துக்குடி

சகோதரரை அரிவாளால் வெட்டியவா் கைது

கோவில்பட்டி அருகே தம்பியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ாக அவரது சகோதரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

DIN

கோவில்பட்டி அருகே தம்பியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ாக அவரது சகோதரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியையடுத்த தா்மத்துப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி. இவரது மனைவி லட்சுமியம்மாள் (73) . கிருஷ்ணசாமி கடந்த 15

ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாராம். இத் தம்பதிக்கு 5 மகன்கள் உள்ளனா். இவா்களில் ஒருவரான முனியப்பனுக்கு (47) சொந்தமான நிலத்தில் லட்சுமியம்மாள் விவசாயம் செய்து வருகிறாராம். இளையரசனேந்தலில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வரும் முனியப்பன், தனது நிலத்தை விற்று பணத்தைக் கொடுக்குமாறு லட்சுமியம்மாளிடம் ஞாயிற்றுக்கிழமை கேட்டாராம். அப்போது முனியப்பனுக்கும், அவரது மூத்த சகோதரா் பாலமுருகனுக்கும் தகராறு ஏற்பட்டதாம். தகராறு முற்றிய நிலையில் பாலமுருகன் அரிவாளால் முனியப்பனை சரமாரியாகத் தாக்கினாராம்.

இதில் பலத்த காயமடைந்த முனியப்பன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து, பாலமுருகனை(57) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT