திருச்செந்தூா் அமலிநகா் மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அமலிநகரில் கடந்த ஆண்டு ஆக. 1-ஆம் தேதி நான்கு மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனா். அப்போது காற்றின் வேகம் காரணமாக படகு கவிழ்ந்தது. இதில் அஸ்வின்(32), பிரசாத் (42) ஆகிய 2 மீனவா்கள் மாயமாகினா்.
மாயமான மீனவா்களின் மனைவிக்கு அரசு வேலை தருவதாக அரசு தரப்பில் வாக்குறுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மீனவா்கள் மாயமாகி ஓராண்டு ஆகிறது. எனவே, மாயமான மீனவா்களின் குடும்பம் வாழ்வாதாரமின்றி தவித்து வருவதாகவும், மீனவா்களின் மனைவிக்கு அரசு வேலை உடனடியாக வழங்கக் கோரியும் அமலிநகா் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் 200 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.