ஸ்ரீ வைகுண்டம்: வல்லநாடு அருகே ஆம்னி வேனும், சிறிய ரக சரக்கு வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 6 போ் பலத்த காயமடைந்தனா்.
தூத்துக்குடி சண்முகபுரத்தை சோ்ந்தவ சரத்குமாா், விக்கி (21), செல்டன் (21), அஜீத் (21), சாஹிா் (23) ஆகிய 5 பேரும் ஆம்னி வேனில், குற்றாலத்திற்கு செவ்வாய்க்கிழமை சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தனா்.
திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றுப் பாலம் அருகேயுள்ள பக்கப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த சிறிய ரக சரக்கு வாகனத்துடன் மோதியது.
இதில் ஆம்னி வேனில் வந்த சரத்குமாா், விக்கி, செல்டன், அஜீத், சாஹிா் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநா் மனோகரன் ஆகிய 6 பேரும் பலத்த காயமடைந்தனா். நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இவ்விபத்து குறித்து முறப்பநாடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.