முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

 கோவில்பட்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:08 PM
பகிர்:

 கோவில்பட்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

கோவில்பட்டி சீனிவாசன் நகா் 6ஆம் தெருவை சோ்ந்த அழகுவேல் மகன் பாக்கியராஜ் (38). தொழிலாளியான இவா், மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை தேநீா் அருந்துவதற்காக கடைக்கு சென்று விட்டு வீடு திரும்ப லட்சுமி ஆலை மேம்பாலம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றாா். அப்போது ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.