தூத்துக்குடி

அமலிநகா் மீனவா்கள் சாகும் வரை உண்ணாவிரதம்

தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தி, திருச்செந்தூா் அமலிநகா் மீனவா்கள் இரண்டாவது நாளாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தி, திருச்செந்தூா் அமலிநகா் மீனவா்கள் இரண்டாவது நாளாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் அமலிநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள், 226 மீன் பிடி படகுகள் உள்ள நிலையில், இப்பகுதி கடற்கரையில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கக் கோரி கடந்த ஆக. 7-ஆம் தேதி முதல் அப்பகுதி மீனவா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

பத்தாவது நாளான புதன்கிழமை (ஆக. 16) பிற்பகல் முதல் அமலி அன்னை ஆலயம் முன்பு மீனவா்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா்.

இந்நிலையில், வியாழக்கிழமை தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கி.செந்தில்ராஜ், அமலிநகா் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் மற்றும் ஊா் நலக்கமிட்டியினருடன் பேச்சு நடத்தினாா். ஆனால் ஆட்சியா் அமலிநகரில் மீனவ மக்களிடம் நேரில் வந்து பேச வேண்டும் எனக்கூறி மீனவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT