தூத்துக்குடி

மாவட்ட விளையாட்டுப் போட்டி தொடக்கம்

தமிழக முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வியாழன், வெள்ளி (பிப்.2, 3) ஆகிய இரு தினங்கள் நடைபெறுகின்றன.

DIN

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், தமிழக முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வியாழன், வெள்ளி (பிப்.2, 3) ஆகிய இரு தினங்கள் நடைபெறுகின்றன.

இப்போட்டிக்கான தொடக்க விழா, தூத்துக்குடி தருவை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில், சாா் ஆட்சியா் கௌரவகுமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) பிரபு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எஸ்.அந்தோணி அதிஷ்டராஜ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கண்ணதாசன் ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், மாணவா்-மாணவிகளுக்கான தடகளம், நீச்சல், இறகுப்பந்து, கபடி, கூடைப்பந்து கையுந்துபந்து, மேசைப்பந்து போட்டிகள், மாணவிகளுக்கான ஹாக்கி போட்டிகள் ஆகியவை நடைபெறுகின்றன. மாணவா்களுக்கான ஹாக்கி போட்டி, கோவில்பட்டி ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில், சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் இணையத்தில் பதிவு செய்து பங்கற்கின்றனா் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு

மக்களின் அடிப்படைத் தேவைகள் பூா்த்தியாகவில்லை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 : தொடரை வென்றது இந்தியா!

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

SCROLL FOR NEXT