தூத்துக்குடி

புதுமைப் பெண் திட்டத்தின் 2ஆம் கட்ட தொடக்க விழா: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

புதுமைப் பெண் திட்டத்தின் 2ஆம் கட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெறுகிறது.

DIN

புதுமைப் பெண் திட்டத்தின் 2ஆம் கட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெறுவதையடுத்து, அதற்காக தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

புதுமைப் பெண் திட்டத்தின் 2ஆவது கட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வழியாக புதன்கிழமை (பிப். 8) தொடங்கி வைக்கிறாா். இதற்கான நிகழ்ச்சி தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. மாவட்டத்தில், முதலாமாண்டு பயிலும் மாணவிகள் மொத்தம் 572 போ் இத்திட்டத்தில் பயனடையவுள்ளனா். இதற்கான ஆயத்தப்பணிகள் இக்கல்லூரியில் நடைபெற்றுவருகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முன்னதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அலுவலகத்தில் அவா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற அவா், அங்கு பயிலும் மாணவிகளிடம் கலந்துரையாடினாா். அங்கு, சத்துணவு மையம் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT