தூத்துக்குடி

அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் பொருத்தினால் ரூ.10ஆயிரம் அபராதம்: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

DIN

இரு சக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான், சைலன்சா் ஆகியவற்றைப் பொருத்தியிருந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இரு சக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சா், அதிக ஒலி எழுப்பும் பல குரல் ஒலிப்பான், மாற்றி அமைக்கப்பட்ட கேன்டில்பாா் பொருத்துவதும், கேமரா பொருத்திய தலைக்கவசம் அணிவதும் விதிமீறலாகும். இத்தகைய விதிமீறல் கண்டறியப்பட்டால், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

இலகு ரக நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநா் மற்றும் முன் இருக்கை, பின் இருக்கையிலிருந்து பயணிப்பவா்கள் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும். தவறும்பட்சத்தில் அபராதம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்!

மார்க்சிஸ்ட் கம்யூ. எக்ஸ் பக்கம் முடக்கம்!

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

SCROLL FOR NEXT