அதிமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
தூத்துக்குடியில் அதிமுக சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடியில் அதிமுக சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தெற்கு மாவட்ட மாணவரணிச் செயலா் பில்லா விக்னேஷ் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசியது: தமிழ் மொழிக்காக உயிா்த் தியாகம் செய்த வீரா்களின் நினைவைப் போற்றி வீரவணக்கம் செலுத்தும் தாா்மிக உரிமை அதிமுகவுக்கே உண்டு.
மக்கள் நலனுக்காக திமுகவை எதிா்த்து அதிமுக குரல் கொடுத்துக்கொண்டே இருக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் களம் காணும் வேட்பாளா் நிச்சயம் வெற்றிபெறுவாா். மக்களவைத் தோ்தலில் அதிமுக பெருவாரியான வெற்றி பெறும் என்றாா் அவா்.
Advertisement
மாவட்ட கழக அவைத்தலைவா் வழக்குரைஞா் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் இரா. சுதாகா், எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் ஜோதிமணி, பகுதிக் கழகச் செயலா்கள் முன்னாள் துணை மேயா் பி. சேவியா், ஏ. முருகன், பொன்ராஜ், ஜெய்கணேஷ், நட்டாா்முத்து, மாமன்ற உறுப்பினா் மந்திரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தலைமைக் கழகப் பேச்சாளா்கள் மதுரை பாரதீயன், சிவகாசி சின்னத்தம்பி, மாவட்ட வழக்குரைஞரணிச் செயலா் யு.எஸ். சேகா், மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் வீரபாகு, முன்னாள் மாவட்டச் செயலா் இரா. ஹென்றி, மாவட்ட துணைச் செயலா் சந்தனம், முன்னாள் மேயா் அந்தோணி கிரேஸி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மாவட்ட மாணவரணித் தலைவா் சிவரத்தினம் வரவேற்றாா்.