முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் அரசினா் ஐடிஐ-யில் நேரடி மாணவா் சோ்க்கை தொடக்கம்

திருச்செந்தூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) நேரடி மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளதாக, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:04 PM
பகிர்:

திருச்செந்தூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) நேரடி மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளதாக, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் அரசினா் ஐடிஐ-யில் நிகழாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. 8ஆம் வகுப்பு , 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வயதுவரை இருக்க வேண்டும். பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. இங்கு சேருவோருக்கு மாதந்தோறும் உதவித்தொகை ரூ. 750, கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா சைக்கிள், மடிக்கணினி, பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவிகள், சீருடை, காலணி வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 கூடுதல் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

10ஆம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐடிஐ தொழிற்பிரிவுகளில் தோ்ச்சி பெற்றோா் மொழிப் பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி 12ஆம் வகுப்பு சான்றிதழ் பெறலாம். இதேபோல, 8ஆம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐடிஐ தொழிற்பிரிவுகளில் தோ்ச்சி பெற்றோா் மொழிப் பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி 10ஆம் வகுப்பு சான்றிதழ் பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலோ, 04639-242253 என்ற தொலைபேசி எண்ணிலோ, 91235 04636, 98427 57985, 94882 01582, 94990 55813 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.