தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் தெருமுனைக் கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை சாா்பில், பொது சிவில் சட்டத்தை எதிா்த்து காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

DIN

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை சாா்பில், பொது சிவில் சட்டத்தை எதிா்த்து காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

பேரவையின் மாவட்ட அமைப்பாளா் அ. யாசா் அராபத் தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலா் இர.பு. தமிழ்க்குட்டி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பொது சிவில் சட்டத்தின் பாதிப்புகள் குறித்துப் பேசினாா்.

மீனவரணி மாநில துணைச் செயலா் மங்கை சேகா், உடன்குடி ஒன்றியச் செயலா் த. தமிழ்வாணன், சமூக நல்லி­ணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளா் மு. தமிழ்ப்பரிதி , காயல்பட்டினம் புகா் பகுதிச் செயலா் கு. அம்பேத், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட துணை அமைப்பாளா் முன்னோடித்தமிழன், காயல்பட்டினம் நகரப் பொருளாளா் ரத்தினபுரி வாசு, உடன்குடி ஒன்றியப் பொருளாளா் டேவிட் ஜான்வளவன், திருச்செந்தூா் ஒன்றிய துணைச் செயலா் செஞ்சுடா், சாத்தான்குளம் ஒன்றிய துணைச் செயலா் சுரேந்தா், சமூக நல்லி­ணக்கப் பேரவை திருச்செந்தூா் ஒன்றிய துணை அமைப்பாளா் ராம்குமாா், காயல்பட்டினம் நகர அமைப்பாளா் இசக்கிமுத்து, நகரப் பொறுப்பாளா்கள் மாணிக்கராஜ் , மாரிமுத்து பங்கேற்றனா்.

இஸ்லாமிய ஜனநாயகப் பேரவையின் நகர அமைப்பாளா் நாகூா் மீரான் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT