தூத்துக்குடி

795 பேருக்கு விலையில்லா சைக்கிள்

பூதலாபுரம், பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 795 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

நாகலாபுரம், வேம்பாா், பேரிலோவன்பட்டி, புதூா், வேப்பலோடை, செங்கோட்டை, வெம்பூா், பூதலாபுரம், பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 795 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் ஞானகுருசாமி, மிக்கேல் நவமணி ஆகியோா் தலைமை வகித்தனா். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கினாா். மாணவா்களின் கல்வி நலனுக்காக அரசு மேற்கொண்டு வரும் சாதனை திட்டங்கள் குறித்து அவா் உரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலா்கள் காசி விஸ்வநாதன், அன்புராஜன், ராமசுப்பு, திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா் இம்மானுவேல், திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா், சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளா் கரண்குமாா், வெம்பூா் ஊராட்சி மன்ற தலைவா் ராஜேஸ்வரி, செங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவா் மகேஸ்வரி, வேம்பாா் ஊராட்சி மன்ற தலைவா் ஆரோக்கியராஜ், பள்ளி தலைமை ஆசிரியா்கள் தெய்வநாயகம், சாய்ராம், ராஜா சண்முகநாதன், ஜெயமீனா, சேகா், லிங்கராஜன், ரஜீலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சராகப் பதவியேற்ற முன்னாள் மத்திய அமைச்சரின் மகன்!

பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பிகார் முதல்வர்! - வைரல் விடியோ

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

SCROLL FOR NEXT