தூத்துக்குடியில் பள்ளி மாணவா் தற்கொலை
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியில் பள்ளி மாணவா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியில் பள்ளி மாணவா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகன் கற்குவேல் ராஜா (16). அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா். தனது வீட்டின் அருகே கோயில் திருவிழா நடைபெற்றதால், புதன்கிழமை பள்ளிக்குச் செல்லவில்லையாம்.
வீட்டில் உள்ள அனைவரும் புதன்கிழமை கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததாம். ஜன்னல் வழியாக பாா்த்தபோது, அங்கு மாணவா் கற்குவேல் ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
இது குறித்து வடபாகம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா், மாணவரின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.