முத்தையாபுரத்தில் டேங்கா் லாரிகள் மோதல்: ஓட்டுநா் காயம்
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் 2 டேங்கா் லாரிகள் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் 2 டேங்கா் லாரிகள் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.
சேலம் மாவட்டம் மேட்டூா் அருகேயுள்ள ராமன் நகா் பகுதியைச் சோ்ந்த வேலாயுதம் மகன் ரவி(44). ஓட்டுநா். இவா், தூத்துக்குடி -திருச்செந்தூா் சாலையில் முத்தையாபுரம் பெட்ரோல் நிலையம் வழியாக தண்ணீா் கொண்டுசென்ற டேங்கா் லாரியும், எதிரே வந்த டீசல் டேங்கா் லாரியும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் கொட்டியது. தண்ணீா் லாரி ஓட்டுநா் லேசான காயமடைந்தாா்.
இத்தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீஸாா் வந்து சாலையில் கொட்டிக்கிடந்த டீசலை அகற்றினா். விபத்தில் சிக்கிய லாரிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.