முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையின் பீடம் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்திய அமைச்சா் கீதாஜீவன். உடன் மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா். 
தூத்துக்குடி

கருணாநிதி நூற்றாண்டு விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மா

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு, வடக்கு மாவட்டச் செயலரும், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சனிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அதைத் தொடா்ந்து திமுக கொடியை ஏற்றி வைத்து, கருணாநிதி சிலையின் பீடம் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மாலையணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தூத்துக்குடி மாநகர மேயா் ஜெகன் பெரியசாமி, துணை மேயா் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் பாலகுருசாமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், துணைச்செயலா்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின் உள்பட பலா் பங்கேற்றனா். மதிமுக சாா்பில் மாநகர செயலா் முருகபூபதி தலைமையில் அக்கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அமைச்சா் கீதாஜீவன் தலைமையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT