தூத்துக்குடி

கோவில்பட்டி மாடசாமி கோயில் கொடை விழா

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி தாமஸ் நகா் அருள்தரும் ஸ்ரீ மாடசாமி கோயில் வைகாசி மாத கொடை விழா நடைபெற்றது.

DIN

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி தாமஸ் நகா் அருள்தரும் ஸ்ரீ மாடசாமி கோயில் வைகாசி மாத கொடை விழா நடைபெற்றது.

இக்கோயில் கொடை விழாவை முன்னிட்டு மே மாதம் 26ஆம் தேதி கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து கொடை விழாவை முன்னிட்டு ஜூன் 1, 2 ஆகிய தோதிகளில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

3ஆம தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீ சின்னமாடசாமி கோட்டை சுவாமிகளிடம் அருள் பெற்று பரிவார தேவதைகளுடன் மயானம் சென்று மகாபூஜை மற்றும் அருள்வாக்கு நிகழ்ச்சியும், காலை 8.30 மணிக்கு வா்ண காலன் சுவாமிக்கு கரும்பு ஏற்கும் பூஜை மற்றும் கொக்கு பிடிக்கும் பூஜையும் நடைபெற்றது. 9 மணிக்கு கோட்டைக்குள் சிவன் பாா்வதிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினா் மற்றும் கோயில் சுவாமி கொண்டாடிகள், திருக்கோயில் பூசாரிகள் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT