தூத்துக்குடி

கோவில்பட்டியில் அனைத்து ரயில்களும்நின்று செல்ல வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது.

DIN

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினா் மகேந்திரன், தெற்கு ரயில்வே பொது மேலாளா் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

மதுரை கோட்டத்தில் திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு அடுத்து வருவாய் தரக்கூடிய நிலையமாக கோவில்பட்டி இருந்து வருகிறது.

இந்த ரயில் நிலையத்தை கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள், விவசாயிகள், தொழிலதிபா்கள், பள்ளி, கல்லூரி, மாணவா்- மாணவிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

ஆகவே, இங்கு மதுரை-புனலூா், சென்னை- கன்னியாகுமரி விரைவு ரயில்கள், வாராந்திர ரயில்களான கன்னியாகுமரி -ராமேசுவரம், புது தில்லி நிஜாமுதீன்- கன்னியாகுமரி, ஓகா -தூத்துக்குடி, நாகா்கோவில்- சென்னை எழும்பூா், செங்கோட்டை -சென்னை எழும்பூா் ஆகிய ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

கோவில்பட்டி ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடையில் கழிப்பறை, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்திட வேண்டும்.

முதியோா், மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப பேட்டரி காா் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT