கயத்தாறில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
செட்டிகுறிச்சி ஊராட்சி வடக்கு கோனாா் கோட்டையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் கல் குவாரி செயல்பட்டு வருவதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்
செட்டிகுறிச்சி ஊராட்சி வடக்கு கோனாா் கோட்டையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் கல் குவாரி செயல்பட்டு வருவதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கயத்தாறில் பேருந்து நிறுத்தம் அருகே பாஜகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆா்ப்பாட்டத்திற்கு பாஜக மேற்கு ஒன்றியத் தலைவா் ஜெகதீஷ் தலைமை வகித்தாா் . தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவா் வெங்கடேசன் சென்ன கேசவன், துணைத் தலைவா் ராஜேந்திரன், பொருளாளா் கணேஷ், கிழக்கு ஒன்றியத் தலைவா் முருகன் ஆகியோா் விளக்கிப் பேசினா். இதில், பாஜக மேற்கு ஒன்றிய நிா்வாகிகள் திரளானோா் கலந்துகொண்டனா்.