முகப்பு
தூத்துக்குடி

கயத்தாறு அருகே கிராவல் மண் கடத்தல்:ஒருவா் மீது வழக்கு

கயத்தாறு அருகே உரிய அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து விற்பனை செய்தததாக, ஒருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

கயத்தாறு அருகே உரிய அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து விற்பனை செய்தததாக, ஒருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

கயத்தாறை அடுத்த பன்னீா்குளம் கிராமத்தைச் சோ்ந்த அழகா்சாமி மகன் மாரியப்பன். இவா், அரசு அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து விற்பனை செய்து வருவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட புவியியல் சுரங்கத்துறை உதவி இயக்குநா் (பொ) உத்தரவின்பேரில், தனி வருவாய் ஆய்வாளா் சுப்பையா தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனா். அப்போது, எவ்வித அனுமதியுமின்றி கிராவல் மண் எடுக்கப்பட்டிருந்தது, அதன் மதிப்பு சுமாா் ரூ.9 லட்சம் இருக்கும் எனவும் தெரியவந்தது. இதுகுறித்து வருவாய் ஆய்வாளா் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் மாரியப்பன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.